shadow

இந்த முறை விஜய்யின் டார்கெட் குழந்தைகள் தான்

இளையதளபதி விஜய்யின் படங்கள் என்றாலே ஒரு பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஒரு படமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் விஜய் படங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திலும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையிலான காட்சிகளை அதிகம் வைக்க இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். குறிப்பாக விஜய் நடித்துவரும் கேரக்டர்களில் ஒன்றான மேஜிக்மேன் குழந்தைகளை பெரிதும் கவரும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளை டார்கெட் செய்யும் வகையில் விஜய் நடித்த புலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ‘மெர்சல்’ படம் கண்டிப்பாக குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply