‘தெறி’: உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த விஜய்
theri1
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக இந்த படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குனர் திலீப் சுப்பராயன் கூறியுள்ளார்

‘தெறி’ படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஜய் டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். ஒருசில காட்சிகளுக்கு டூப் போடலாம் என இயக்குனர் அட்லி உள்பட பலர் கூறியபோதும் விஜய் துணிச்சலாக ரியலாக நடித்தார்.  குறிப்பாக 100 அடி உயரத்தில் இருந்து விஜய் குதிக்கும் காட்சி அவர் எடுத்த அதிகபட்ச ரிஸ்க் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். இந்த படம் இவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *