பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு விவகாரம்: விஜய் வெளியிட்ட அறிக்கை

பிரபல ஆங்கில பத்திரிகையில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆபாசமாக விமர்சனம் செய்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதன்முதலாக நடிகர் விஜய் இந்த விஷயத்தில் தலையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமுதாயத்தில் பெண்களை அதிகளவில் மதிப்பவன் நான். யாருடைய படத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம். எக்காரணம் கொண்டும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் செய்யக்கூடாது என்பது எனது கருத்து. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். சமூக வலைதளத்தில் யாருடைய மனதும் புண்படும்படி தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்’ என்று கூறியிருந்தார்

விஜய்யின் இந்த அறிக்கைக்கு பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *