துப்பாக்கி படத்தை அடுத்து விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது.

மும்பையை மையமாக வைத்து ‘துப்பாக்கி’ தயாரானது போன கொல்கத்தாவை மையமாக வைத்து இந்த புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. அனிருது இசையில் பாடல்கள் தயாராகி வருகின்றன.

அழகிய தமிழ்மகன் படத்திற்கு பின்னர் விஜய் இரட்டை வேடங்களில் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.

Leave a Reply