விஜய் பாடிய ஒரு மணி நேர புலிப்பாடல்

vijay singவிஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் டீஸர் மிகக்குறுகிய காலத்தில் யூடியூபில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் பாடல் ஒலிப்பதிவு பணிகளை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் விரைவில் பாடல்கள் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் பாடிய பாடல் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் இந்த பாடலை ஒரு கைதேர்ந்த பாடகரை போல கொஞ்சம்கூட பதட்டமின்றி ஒரே மணி நேரத்தில் பாடி முடித்ததை பார்த்து தேவிஸ்ரீ பிரசாத் அசந்துவிட்டதாக கூறப்படுகிறது. புரபசனல் பாடகர்கள் கூட சில சமயங்களில் ஒரு மணி நேரத்தில் பாடலை பாடி முடிக்க முடியாத நிலையில் விஜய், சிறப்பாக இந்த பாடலை பாடியதில் இருந்தே அவரது பாடும் திறன் வெளிப்பட்டுள்ளதாக படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் விஜய் பாடிய பாடலில் ‘வானமே கிட்ட வருதே…வானவில் வட்டமாகுதே’  ‘நாடு பறிபோகலாம்..மானம் பறிபோகலாமா? புலித்தோலை உசுரோட உறிக்க முடியுமா? போன்ற வரிகள் இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *