shadow

‘பைரவா’ படத்திற்காக விஜய் பாடிய பக்கா ரொமான்ஸ் பாடல்

bairava-5இளையதளபதி விஜய் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களிலும் ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பாடும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதால் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் செண்டிமெண்ட்டாக விஜய்யை ஒரு பாடலை பாடும்படி கேட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இதுவரை விஜய் தற்போது நடித்து வரும் ‘பைரவா’ படத்திலும் ஒரு பக்கா ரொமான்ஸ் டூயட் பாடலை பாடியுள்ளதாக இயக்குனர் பரதன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சூப்பராக அமைந்துள்ளதாகவும் இந்த பாடலை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply