விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் பாபிசிம்ஹா

vijaysethupathiஇந்த வருடன் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்த ‘புரியாத புதிர்’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’, ‘கவண்’, ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் அவர் தற்போது ‘அநீதி கதைகள்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘ரேணுகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக வந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் இணைந்து ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *