shadow

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
vijaysethupathi
நானும் ரெளடிதான்’ மற்றும் ‘சேதுபதி’ படங்களின் வெற்றிக்கு பின்னர் விஜய்சேதுபதி நடித்த அடுத்த படமான வரும் மார்ச் 11ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் நாளை மறுநாள் இந்த படத்தின் பாடல் வெளியீடு விழாவும் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சூதுகவ்வும்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நலன்குமாரசாமியின் இரண்டாவது படம்தான் ‘காதலும் கடந்து போகும்’. விஜய்சேதுபதியுடன் ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சி.வி.குமார் அவர்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படமும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெருமை விஜய்சேதுபதிக்கு சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply