Chennai Today News

விஜய்சேதுபதியின் அடுத்த ஹீரோயின் ரித்திகா சிங்

விஜய்சேதுபதியின் அடுத்த ஹீரோயின் ரித்திகா சிங்


இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகர் விஜய்சேதுபதி ‘நானும் ரெளடிதான்’, ‘சேதுபதி’ ஆகிய தொடர் வெற்றிக்கு பின்னர் உற்சாகமாக உள்ளார். இந்நிலையில் நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும் ஏற்கனவே மெல்லிசை, தர்மதுரை, ரெக்க, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆண்டவன் கட்டளை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகாசிங் நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் மணிகண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!