shadow

Arya, Shaam in Purampokku Movie Photosநிதி அலுவலகம் ஒன்றில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா கைது செய்யப்படுவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் புறம்போக்கு என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது.

இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கி வரும் படம் ‘புறம்போக்கு. இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும், பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை யூடிவி நிறுவனமும், பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றது.

இந்த திரைப்படத்தில் ஆர்யா நிதி ஆலோசகராகவும், விஜய் சேதுபதி ரயில்நிலைய கூலியாகவும், ஷாம் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகின்றனர். நிதி ஆலோசனை அலுவலகத்தில் நடந்த ஒரு மோசடியில் சிக்கிய ஆர்யாவை, ஷாம் கைது செய்து சிறையில் அடைப்பது போன்றும், சிறையில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் சந்தித்து ஒருவருக்கொருவர் நண்பர்களாக மாறி இருவரும் தப்பித்து செல்வது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் பிரமாண்ட சிறை செட் போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

Leave a Reply