shadow

விஜய்சேதுபதியின் 25வது படத்தில் ஒரு புதுமை

பிரபல நடிகர் விஜய்சேதுபதி குறுகிய காலத்தில் 25வது படம் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார். அவரது 25வது படத்திற்கு ‘சீதக்காதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் ‘அய்யா’. அவர் இந்த படத்தில் ஒரு நடிகராகவே நடிக்கவுள்ளார். நடிகர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறும் படம்தான் ‘சீதக்காதி’.

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியே இல்லை. அதனால் இந்த படத்தில் அவருக்கு ரொமான்ஸ் காட்சியும் இல்லை. இந்த படம் ஹீரோயின் இல்லாமல் இருந்தாலும், படத்தில் தோன்றும் நடிகைகளாக ரம்யா நம்பீசன் உள்பட பிரபல நடிகைகள் இந்த படத்தில் நடிப்பார்கள். விஜய்சேதுபதியின் 25வது படம் நாயகியே இல்லாமல் இருப்பது ஒரு புதுமையாக கருதப்படுகிறது.

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மெளலி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இவ்வாறு பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply