shadow

ரஜினியின் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணையவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *