shadow

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்களில் ஒன்றான ’கடைசி விவசாயி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் வயதான விவசாயி ஒருவரின் கதை மிகவும் இயல்பாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மக்களின் அறியாமையும் காட்டப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகிய இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது