தனுஷை அடுத்து பிரபல ஹீரோவுக்கு ஜோடியான மஞ்சுவாரியர்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்தப் படத்தில் தனுஷை அடுத்து மஞ்சுவாரியர் நடிப்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்

இந்த நிலையில் தனுஷை அடுத்து விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் மஞ்சுவாரியர் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படம் தமிழ் படம் அல்ல என்பதும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த மலையாள படத்தில் தான் அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’மார்கோனி மாத்தாய்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது ஷான் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளார்.

முதன்முறையாக விஜய்சேதுபதிக்கு மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் தமிழ் புத்தாண்டுக்கு இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply