shadow

இளையதளபதிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

vijaymஇளையதளபதி விஜய்யின் ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்று அவரது 16வது திருமண நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி லண்டனை சேர்ந்த தமிழ்ப்பெண் சங்கீதாவை விஜய் திருமணம் செய்தார். விஜய்-சங்கீதா திருமணத்திற்கு அஜீத் உள்பட திரையுலகினர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். விஜய்-சங்கீதா தம்பதிக்கு கடந்த 2000ஆம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், கடந்த 2005ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தனர். 16வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வரும் விஜய்-சங்கீதா தம்பதிக்கு chennaitodaynews.com இணையதளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

விஜய்-சங்கீதா தம்பதிக்கு விஜய் ரசிகர்களும், திரையுலகினர்களும் ஃபேஸ்புக்,டுவிட்டர் மூலம் இன்று காலை முதல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் இதற்கென  #HappyWeddingAnnivMrandMrsVijay என்ற ஹேஷ்டேக் உண்டாக்கி அதில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.