shadow

இளையதளபதி விஜய் ஒரு நடிகராக மட்டுமின்றி அவ்வப்போது தன்னால் முடிந்த சமூக சேவையும் செய்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி அனைத்து மத ரசிகர்களையும் மதிக்க தெரிந்தவர். இந்நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நடைபெற்று வருவதை அடுத்து, நேற்று விஜய் 100 இஸ்லாமியர்களுக்கு சென்னையில் இப்தார் விருந்து கொடுத்துள்ளார்.

இஸ்லாமிய நண்பர்களுக்கு தனது கைகளாலே இப்தார் விருந்தை பரிமாறிய விஜய், அவர்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டார். விஜய்யின் விருந்தில் கலந்து கொண்டது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் இன்று மீண்டும் ‘விஜய் 59’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த முதல்கட்ட படப்பிடிப்பும் இன்னும் ஐந்து நாட்களில் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *