மோகன்ராஜாவுடன் விஜய் திடீர் சந்திப்பு! ‘வேலாயுதம் 2’ உருவாகிறதா?

இளையதளபதி விஜய் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் சற்றுமுன்னர் மோகன்ராஜாவை விஜய் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்காக மோகன்ராஜாவை வாழ்த்திய விஜய், அவரிடம் நீண்ட நேரம் சினிமா குறித்தும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் பலமணி நேரம் பேசியதாக தெரிகிறது.

இந்த பேச்சின் இடையே ‘வேலாயுதம் 2’ படம் குறித்தும் பேசப்பட்டதாகவும், இந்த படம் உருவாகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளதாகவும், வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts