விஜய் மல்லையாவின் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிட்ட ஹேக்கர்கள்
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதோடு அவருடைய வங்கிக்கணக்குகள், இமெயில்கள், வங்கிக்கணக்குகளின் பாஸ்வேர்டுகள் ஆகிய அனைத்தையும் அவருடைய டுவிட்டரில் ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட விஜய் மல்லையாவின் அனைத்து விபரங்களும் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.