விஜய்மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம். அமலாக்கத்துறை அதிரடி

vijay mallaiahஇந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படும் தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

விஜய் மல்லையா மீதுள்ள மோசடி வழக்குகளின் விசாரணைக்காக அவரை இந்தியா அழைத்துவர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ.டி.பி.ஐ வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத வழக்கில், விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்களை முடக்கம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய்மல்லையா இந்தியா திரும்ப மறுத்துள்ளதால் இன்னும் ஒருசில அதிரடி நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க தயங்காது என்றும் அவரிடம் இருந்து முழுக்கடன் தொகையையும் கூடிய விரைவில் வசூலித்துவிடுவோம் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *