shadow

தொடர் நெருக்குதல் எதிரொலி: ரூ.4000 கோடியை திருப்பி அளிக்க விஜய் மல்லையா ஒப்புதல்
vijay mallaiah
பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு தப்பித்து சென்றுவிட்ட விஜய் மல்லையாவுக்கு பலமுனைகளில் இருந்தும் நெருக்கடி வலுத்து வருவதால் தற்போது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.4000 கோடி ரூபாயை திருப்பி அளிப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.

ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து ஆஜர்படுத்தும்படி ஐதராபாத் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரகுநாத்தையும் கைது செய்து வரும் ஏப்ரல் 13-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் விஜய் மல்லையாவுக்கு எதிராக சில பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் மல்லையா சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சீலிட்ட உறையில் கடித வடிவில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒருசில வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய் மல்லையா திருப்பித்தர முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் மேற்படி வழக்கின் மறுவிசாரணையை வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

Leave a Reply