shadow

சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜய்

vijay salaryஉலகில் உள்ள பிரபலமானவர்கள் குறித்த தகவலை பார்க்க வேண்டுமா? உடனே நாம் இணையதளத்திற்கு செல்வது அவர்களுடைய விக்கிபீடியா பக்கமே. உலகில் உள்ள அனைத்து பிரபலங்கள் குறித்த முழு விபரங்களையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா இணையதளம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து இந்த இணையதளத்தில் அதிகளவில் மாற்றம் செய்யப்பட்ட பிரபலங்கள் குறித்த பட்டியல் ஒன்று சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பிரபலங்கள் என்ற தலைப்பில் இந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இளையதளபதி விஜய் இந்திய அளவில் முதலாவதாக இடம்பெற்றுள்ளார். விஜய்யின் விக்கிபீடியா பக்கம் 17,736 முறை மாற்றம் செய்யப்பட்டு உலக அளவில் 15வது இடத்திலும் இந்திய அளவில் முதல் இடத்திலும் இடம்பெற்றுள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக 47வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், 93வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இடம்பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் ரஜினிக்கு அடுத்தபடியாக வசூல் மன்னனாக திகழும் திகழ்பவர் விஜய் இருந்துவரும் நிலையில் அவர்தான்  அதிகளவு சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் உள்ளார். அவரது ஒவ்வொரு படங்களும் மிகப்பெரிய டென்ஷனுடனே ரிலீஸ் ஆகிறது என்பதே இதற்கு சான்று.

Leave a Reply