shadow

விஜய் சூப்பர் ஸ்டார் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. நட்டி

super starரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்ற பல நடிகர்கள் முயற்சி செய்து வந்தபோதிலும், அந்த பட்டத்தை கைப்பற்ற அஜீத் மற்றும் விஜய் இடையே கடும்போட்டி ஏற்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் ஒரு முன்னணி வார பத்திரிகை அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற வாக்கெடுப்பை நடத்தி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அறிவித்தது.

இந்நிலையில் பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நடராஜன் ‘சந்தேகமே இல்லை. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அடித்து கூறியுள்ளார்.

புலி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சிம்புதேவன் ,தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் – ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், கலை இயக்குநர் முத்தையா, கிராஃபிக்ஸ் கமலகண்ணன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். புலி படத்தை பற்றியும் அதில் நடித்த நடிகர்களை பற்றியும் செய்தியாளர்களுக்கு கேள்விகளுக்கு இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரும் பதிலளித்து வந்தனர்.

அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒளிப்பதிவாளர் நட்டி, வார்த்தைக்கு வார்த்தை விஜய்யை பற்றி குறிப்பிடும்போது சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியையும் சேர்த்தே கூறினார். அப்போது விஜய்யை சூப்பர் ஸ்டார் என தெரிந்துதான் சொன்னீர்களா அல்லது வாய்தவறி சொல்லிவீட்டீர்களா என செய்தியாளர்கள் கேட்க அவர் சூப்பர் ஸ்டார் தானே, ஒரு முன்னணி பத்திரிகையிலேயே நிரூபித்துவிட்டதே எனக் கூறினார்.

Leave a Reply