விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் ரிலீஸ்: போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்

இளையதளபதி விஜய் நடித்த படங்கள் ரிலீஸ் என்றால் முதல் நாளே அவரது ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டியது போல நேற்று நடந்த விழா ஒன்றில் விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் ரிலீஸ் ஆகின. இந்த புத்தகங்களை வாங்க விஜய் ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.

The Icon of Millions” என்ற ஆங்கில புத்தகமும், ‘கோடிக்கணக்கான மக்களின் அடையாளம்’ என்ற தமிழ் புத்தகமும் நேற்று வெளியானது. இந்த இரண்டு புத்தகங்களையும் நீதிபதி டேவிட் அன்னுசாமி என்பவர் வெளியிட அவற்றை பிரபல எழுத்தாளர் பசுபதி ராஜன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழவில் கலந்து கொண்ட ஏராளமான விஜய் ரசிகர்கள் இந்த இரண்டு புத்தகங்களையும் வரிசையில் நின்று விலைக்கு வாங்கி சென்றனர்.

இந்த புத்தகங்களை வெளியிட்ட நீதிபதி டேவிட் அன்னுசாமி இந்த விழாவில் பேசியபோது, ‘இந்த புத்தகங்கள்ல் அளவில் சிறியவையாக இருந்தாலும், மாஸ் ஹீரோ விஜய் குறித்த பல அரிய தகவல்கள் உள்ளதாக தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *