சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் விஜய்?
vijay salary
சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்தரிக்கா’ படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் சுந்தர் சி அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும், பாகுபலி, எந்திரன் 2′ படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்வதில் சுந்தர் சி உள்பட படக்குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *