shadow

விஜய் தமிழகத்தை ஆளப்போகிறாரா? மெர்சல் போஸ்டரால் பரபரப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது.

இந்த பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று இருப்பது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் விரைவில் தமிழக அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வரியுடன் பாடலை துவக்குவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு விஜய் விரைவில் தமிழகத்தை ஆள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

மேலும் செக்க செவேலென இருக்கும் இந்த புதிய போஸ்டரில் விஜய்யின் தோற்றம் மற்றும் போஸ்டர் டிசைன் அமைப்பு ஆகியவையும் அட்டகாசமாக உள்ளது. இந்த ஒரே ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply