shadow

6கடந்த சில நாட்களுக்கு முன்னர்  சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேஜர் முகுந்த் குடும்பத்தினர்களுக்கு முக்கிய தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மேஜர் முகுந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய், மேஜரின் மகள் அர்ஷாவுடன் இரண்டு மணி நேரம் இருந்ததோடு, தனது படப்பிடிப்பை பார்க்கவும் அழைத்து சென்றார். பின்னர் அர்ஷாவின் படிப்பு செலவை முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக விஜய் அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவலை முகுந்த் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நடிகர் விஜய், அர்ஷாவை சந்தித்து சிலமணி நேரம் இருந்தது உண்மைதான் எனினும் அவருடைய படிப்பு செலவு குறித்து விஜய் எவ்வித வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றும், விஜய்யின் உதவியை பெறும் நிலையில் நாங்கள் இல்லை என்றும், அர்ஷாவின் படிப்பு செலவை எங்களால் சமாளிக்கும் அளவுக்கு நாங்கள் வசதியாகத்தான் இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். அர்ஷாவுக்கு விஜய் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை கேள்விப்பட்டு அவர் எங்கள் வீட்டிற்கு வந்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Leave a Reply