கண்டுகொள்ளாத அஜீத், கை கொடுத்த விஜய். சிம்புவின் நெகிழ்ச்சியான அனுபவம்

ajith and vijayசிம்புவின் வாலு படம் ஒருவழியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை விநியோகிஸ்தர்களிடையே விற்பனை செய்ய இளையதளபதி விஜய் உதவி செய்ததாக வெளிவந்த தகவலால் கோலிவுட் ஆச்சரியம் அடைந்துள்ளது.

சிம்பு ஒரு தீவிர அஜீத் ரசிகர் என்பது தெரிந்தும் அவருடைய படத்தின் ரிலீஸுக்கு விஜய் தன்னால் இயன்ற உதவியை செய்வது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

விஜய் படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வரும் விநியோகிஸ்வர்களிடம் விஜய் தரப்பு பேசி, சிம்புவின் ‘வாலு’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், விஜய்யின் வேண்டுகோளை ஏற்று, விஜய்யின் அனைத்து படங்களையும் ரிலீஸ் செய்யும் காஸ்மோ நிறுவனம் கோவை மற்றும் திருச்சி ஏரியாக்களை வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் மற்ற ஏரியாக்களின் விநியோகிஸ்தர்களும் விஜய்க்காக வாங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்து அஜீத் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியான சந்தர்ப்பதில் தனக்கு உதவி செய்யும் விஜய் மீது சிம்புவுக்கு அதிகளவு மரியாதை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *