விபத்தில் இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் செய்த மகத்தான உதவி!

பெரும்பாலான மாஸ் நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்களை தங்கள் படத்தின் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் பின்னர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

ஆனால் தளபதி விஜய்யை பொருத்தவரை ரசிகருக்கு ஏதாவது என்றால் உடனே ஓடோடி சென்று உதவுவதில் முதலாக இருக்கிறார் இந்த நிலையில் நாமக்கல் அருகே ரசிகர் ஒருவர் விபத்தில் மரணமடைந்த செய்தியை கேட்டு அவருடைய குடும்பத்திற்கு விஜய் செய்த உதவி பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த முருகன் என்பவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் இந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் தவிக்கும் சூழலை கேள்விப்பட்ட விஜய், உடனடியாக அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளார். அது மட்டுமின்றி வேறு எந்த உதவி தேவை என்றாலும் தன்னை தாராளமாக அணுகலாம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் விஜய்யின் இந்த செய்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Leave a Reply