shadow

ரசிகர்களுக்காக வீட்டை இலவசமாக கொடுத்த விஜய்
vijay
இளையதளபதி விஜய்யின் மூன்று ரசிகர்கள் குறித்த படம் ஒன்றின் படப்பிடிப்பை தனது வீட்டில் நடத்த விஜய் அனுமதித்ததாகவும், அதற்காக அவர் படத்தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஷெபி என்ற அறிமுக இயக்குனர்  ‘3 ரசிகர்கள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வந்து சென்னையில் மேலும் இரண்டு விஜய் ரசிகர்களுடன் இணைந்து விஜய்யை நேரில் சந்திக்க இவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் முயற்சிகளை காமெடியாக இயக்குனர் கூறியுள்ளாராம்.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் இந்த மூன்று ரசிகர்களும் சந்திப்பது போன்ற காட்சிகளை படமாக்க விஜய்யிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அனுமதி தந்ததோடு அதற்காக பணம் எதையும் பெற்றுக்கொள்ள விஜய் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் விஜய்யையும் ஓரிரு காட்சிகளில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் படங்களின் சூப்பர் ஹிட் படங்களின் டைட்டிலை கொண்டு ”கில்லி கில்லி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்றும் இயக்குனர் ஷெபி கூறியுள்ளார்.

Leave a Reply