2021ல் அரசியல் களத்தில் இறங்குகிறாரா விஜய்? ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் அவ்வப்போது தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி பரபரப்புடன் போஸ்டர் அடித்து ஒட்டுவது என்பது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் இது குறித்த ஒரு போஸ்டரை அடித்து ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை பரங்கிமலை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டரில் ’234 தொகுதிகள் சைலண்டா இருக்கும் 2021ல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் அதன் பின்னால் தமிழக அரசின் தலைமைச் செயலகமும் இருப்பதால் விஜய் அரசியலுக்கு வருவதை முன்னோட்டமாக இந்த போஸ்டரில் காட்டுவது போல் இருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது

ஏற்கனவே 2021ல் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்து உள்ள நிலையில் விஜய்யும் அரசியலில் குதிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply