shadow

appukuttyவெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, மரியான் போன்ற பல படங்களில் நடித்தவர் அப்புக்குட்டி. தற்போது இவர் ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்’ கிடையாது என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் அப்புக்குட்டியும், நடிகை வர்ஷாவும் திருமணம் செய்வது போன்ற காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டது. நடிகை வர்ஷா ஏற்கனவே கங்காரு படத்தில் விஜய் ரசிகையாக நடித்தவர் என்று கூறப்படுகிறது. இருவரது திருமணத்தையும் அமைச்சராக நடிக்கும் மனோபாலா நடத்தி வைப்பது போன்ற ஒரு காட்சியும், அந்த திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த காமெடி காட்சிகளும் இன்று படமாக்கப்பட்டது.

விக்ரம் சிவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ரக்ஷன், சாரா தேவா, சிங்கம்புலி, இமான், நிழல்கள் ரவி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, தேவதர்ஷினி, உள்பட பலர் நடிக்கின்றனர். பாரதி மோகன் இயக்கும் இந்த படத்தை ஆர்.ஆர். ராகவேந்திரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply