‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடும் ரசிகர்.

bairavaaஅழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் பிரம்மாதமான டான்ஸ் கொண்ட ஒரு பாடலின் படபிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ரோஷன் பஷீர் ஆடவுள்ளாராம். இவர் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ மற்றும் விஜய் ரசிகர்கள் நடித்த ‘3 ரசிகர்கள்’ ஆகிய படத்தில் நடித்தவர் என்பதும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் படப்பிடிப்புக்காக பிரமாண்டமான செட் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யுடன் முதன்முதலாக ஆடவிருப்பதால் டென்ஷன் அதிகமாக இருப்பதாக கூறிய ரோஷன் பஷீர் சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *