நள்ளிரவு ஆரம்பித்த தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்

இந்த போஸ்டர்களில் கொளுத்துங்கடா என்ற வார்த்தை இருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் அந்த வார்த்தையை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த அட்டகாசமான கலர்ஃபுல்லான போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்னும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply