shadow

rajini-vijay-ajithபிரபல அமெரிக்க இணையதளம் ஃபோர்ப்ஸ் சமீபத்தில் இந்தியாவின் 100 சினிமா பிரபலங்கள் குறித்து சர்வே ஒன்றை எடுத்தது. இந்த சர்வே முடிவு நேற்று மாலை அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த சர்வேயில் முதலிடத்தை பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான் பெற்றுள்ளார். மேலும் 13வது இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.

கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் விஜய், ரஜினி மற்றும் அஜித் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விஜய் இந்த பட்டியலில் 41வது இடத்திலும், ரஜினி 45வது இடத்திலும் அஜீத் 51வது இடத்திலும் உள்ளனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 30வது இடத்தில் உள்ளார். மேலும் தனுஷ் 78வது இடத்திலும், பிரபுதேவா 88வது இடத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் 39 வது இடத்திலும் உள்ளனர்.

ரஜினி மற்றும் அஜீத்தை விட விஜய் இந்த பட்டியலில் முன்னணி இடம் பிடித்தது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply