shadow

vijay awards
தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள் ஆகியவற்றுக்கு இணையாக கோலிவுட் நட்சத்திரங்கள் பாராட்டும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும் கடந்த ஆண்டுகள் நடந்த விழாக்களை போல ஷாருக்கான், விஜய்,போன்ற பெரிய ஸ்டார்கள் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அஜீத்துக்கு விருது அறிவிக்கப்படும் என காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு எந்தவித விருதுகளும் அறிவிக்காததால் டுவிட்டரில் அவர்கள் தங்கள் கோபத்தை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விருது விழாவில், 38 சிறந்தவர்களுக்கான விருதும், 5 ஃபேவரெட் பிரிவு விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் குழுவில், ஆர்.பால்கி, கே.பாக்யராஜ், யூ.கி.சேது, கே.வி. ஆனந்த் மற்றும் நடிகை நதியா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

விருது வென்றவர்களின் பட்டியல்:

சிறந்த படம் – வேலையில்லா பட்டதாரி

சிறந்த இயக்குனர் – கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த நடிகை – அமலா பால் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த துணை நடிகர் – கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை – சீதா (கோலி சோடா)

சிறந்த காமெடியன் – தம்பி ராமையா (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)

சிறந்த வில்லன் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த அறிமுக நடிகர் – துல்கர் சல்மான் (வாய் மூடி பேசவும்)

சிறந்த அறிமுக நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாரா (சைவம்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)

சிறந்த எடிட்டிங் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

சிறந்த கலை இயக்குனர் – சாபு சிரில் (லிங்கா)

சிறந்த பாடகர் – பிரதீப் (ஆகயம் தீப்பிடிச்சா)

சிறந்த பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (அழகு அழகு)

சிறந்த பாடலாசிரியர் – கபிலன் (ஆத்தங்கரை ஓரத்தில்)

சிறந்த கதை, திரைக்கதை – விஜய் மில்டன் (கோலி சோடா)

சிறந்த நடன இயக்குனர் – ஷோபி (ஜீவா)

சிறந்த சண்டைபயிற்சி – சுப்ரீம் சுந்தர் (கோலி சோடா)

சிறந்த ஒப்பனை – பட்டினம் ரஷித் (காவிய தலைவன்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – பெருமாள், நிரஞ்சினி அகத்தியன் (காவியத்தலைவன்)

சிறந்த புதுமுக இயக்குனர் – ராஜா முருகன் (குக்கூ)

சிறந்த படக்குழு – சதுரங்க வேட்டை

சிறப்பு விருது – சௌந்தர்யா ரஜினிகாந்த் (கோச்சடையான்)

செவாலிய சிவாஜி விருது – ஏவிஎம் சரவணன்

Favorite ஹீரோ – ரஜினி (லிங்கா)

Favorite ஹீரோயின் – ஹன்சிகா (மான்கராத்தே)

Favorite படம் – கத்தி

Favorite இயக்குனர் – ஏ.ஆர். முருகதாஸ்(கத்தி)

Favorite பாடல் – அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி)

Leave a Reply