shadow

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணைகிறது ‘தெறி’ கூட்டணி.

vijay-atleeஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள ரூ.350 கோடி பட்ஜெட் படமான ‘சங்கமித்ரா’ படத்தில் விஜய் நடிப்பதாக இருந்து பின்னர் அது மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அடுத்த படத்திற்காக செல்வராகவன் உள்பட பல இயக்குனர்கள் கதை சொல்லியுள்ள நிலையில் அட்லிக்கு மீண்டும் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த படம் விஜய்யின் 61வது படமா? அல்லது 62வது படமா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply