மணமகள் சினேகா பிரிட்டோவுடன் விஜய்: வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும், நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளிக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் நேற்று சினேகா பிரிட்டோவிற்கும் ஆகாஷ் முரளிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு சினேகா பிரிட்டோவுடனும் ஆகாஷூடனும் தனித்தனியாகவும் இணைந்தும் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்த திருமண நிச்சய்தார்த்த விழாவிற்கு வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது/

Leave a Reply