shadow

விஜய் நடிக்கவிருந்த படத்தில் விஜய் ஆண்டனி?

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் சீமான் இயக்குவதாக இருந்த ‘பகலவன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து பின்னர் மறைந்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ‘பகலவன்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்களை முடித்தவுடன் சீமான் இந்த படத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ‘எமன்’ திரைப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் இருவேடங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply