shadow

விஜய்-வினோத் கூட்டணியில் ‘சதுரங்க வேட்டை 3?

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் மிகபெரிய வெற்றியை பெற்றது. அவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமும் வெற்றி பெற்றதால் முன்னணி இயக்குனர் பட்டியலில் அவர் இணைந்துவிட்டார்.

இந்த நிலையில் வினோத் திரைக்கதையில் நிர்மல்குமார் இயக்கத்தில் உருவான ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படமும் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யை சந்தித்த இயக்குனர் வினோத் ஒருபுதிய ஆக்சன் கதையை கூறியதாகவும், இந்த படம் ‘சதுரங்க வேட்டை 3’ என்ற பெயரில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய், இந்த படத்தை முடித்துவிட்டு வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply