shadow

ajith and suryaகடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் ‘மாஸ்’ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நேற்று முதல் வசூல் மிகவும் குறைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படத்திற்கு வந்த பெரும்பாலான நெகட்டிவ் ரிசல்ட், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ஆகியவைகளே இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் இந்த படம் ரூ.17 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது இந்த வசூல் மிகவும் குறைவு என விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜீத்தை கலாய்த்தும், விஜய்யை பாராட்டியும் சில காட்சிகள் வருவதால், அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் ரிசல்ட்டை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த இளையதளபதி விஜய், சூர்யாவை பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் அஜீத் ரசிகர்களுக்கு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல உள்ளது. அஜீத்தையும், அஜீத் ரசிகர்களையும் கடுப்பேற்றுவதற்காக விஜய், மாஸ் படத்தை பாராட்டியுள்ளதாக அஜீத் தரப்பினர் புரிந்துகொண்டு முன்பை விட மிக அதிகமாக ‘மாஸ்’ படத்திற்கு எதிராக ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். அஜீத்தை எதிர்க்க விஜய், சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply