shadow

விஜய்-சமந்தா கலந்து கொண்ட கலகலப்பான பிறந்த நாள் விழா

இளையதளபதி விஜய் பிறந்த நாள் இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் அவரது இந்த வருட பிறந்த நாளை அமோகமாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் தயாரிப்பாளரும், பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராம.நாராயணன் மகனுமான முரளிராமசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படது.

இந்த பிறந்த நாள் விழாவில் விஜய், சமந்தா, அட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு விஜய் கேக் ஊட்டி பிறந்த நாள் விழாவை கலகலப்பாக்கினார். விஜய் கலந்து கொண்ட இந்த பிறந்த நாள் தனக்கு மறக்க முடியாத ஒரு பிறந்த நாளாக அமைந்ததாக முரளிராமசாமி நன்றி கூறினார்.

Leave a Reply