shadow

vijay, ajith and shankarஅஜீத்தின் என்னை அறிந்தால் மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான ஷங்கரின் ‘ஐ’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் படத்தை பொருத்தவரை முதல் மூன்று நாட்களில் வரும் வசூல் படத்தின் பட்ஜெட்டை நெருங்கிவிடும். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் அந்த தினங்களில் வரும் கலெக்ஷன் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிடும். ஆனால் ‘ஐ’ படத்தின் நிலைமை அப்படியல்ல. விஜய், அஜீத் போன்ற ஸ்டார்களுக்கு உள்ள மாஸ் விக்ரமிற்கு கிடையாது. ஷங்கரின் பிரமாண்டம் ஒன்றை வைத்துதான் படத்தை ஓட்டியாக வேண்டிய நிலை.

இந்நிலையில் அஜீத் படத்துடன் மோதுவது நல்லதல்ல என்று ஷங்கருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். மேலும் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது விஜய்யை அழைக்காமல் ஷங்கர் அவமதித்ததால் விஜய் ரசிகர்கள் ஷங்கரின் படத்தை பார்க்க மாட்டோம் என டுவிட்டரில் சபதம் செய்து வருகின்றனர். அஜீத் ரசிகர்களும் தங்கள் ‘தல’ படத்திற்கு எதிராக ‘ஐ’ வருவதால் பெரும் அதிருப்தியுடன் இருக்கின்றார்கள் என கூறப்படுகிறது. அஜீத், விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் ரசிகர்களை கோபப்படுத்திய ‘ஐ’ படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பதே இப்போதைய கோலிவுட்டில் ஹாட் டாக்.

Leave a Reply