shadow

மூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் சர்கார் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்ட நிலையில் மிக விரைவில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த பட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவெ ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்த விஜய்-ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

அதேபோல் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாகவும், மற்ற டெக்னீஷியன்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்களே இந்த படத்திலும் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply