shadow

இளையதளபதியுடன் 3ஆம் முறை இணையும் ஆஸ்கார் நாயகன்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2 முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வந்து கொண்டே உள்ளது.

ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் காமெடி நடிகராக சத்யன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும்

ஏற்கனவே விஜய் நடித்த ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் மீண்டும் அவர் 3வது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply