மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்


இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ‘விஜய் 62’ படத்தில் இணையவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே ‘விஜய் 62’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என பிரமாண்டங்கள் அனைத்தும் ஒரே படத்தில் இணைவதால் படத்தின் பட்ஜெட்டும் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு மட்டுமே ஒருசில கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *