விஜய்யின் 64வது படமும் 100வது படம்தான்

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் நடித்த இளையதளபதி விஜய், அடுத்ததாக சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விஜய், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த பூவே உனக்காக’, ‘லவ் டூடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 63வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய், இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஒரு புதுமுகம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *