அரசியலில் நுழைய ‘தெறி’யில் அஸ்திவாரம் போடும் விஜய்
mgr
கோலிவுட் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் விஜய் அல்லது அஜித்தின் ரசிகர்களாக திரையில் தோன்றி கைதட்டல் பெற்று வரும் நிலையில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகராக ‘தெறி’ படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக விஜய் நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் பல காட்சிகள் எம்.ஜி.ஆர் போஸ்டர்களும் பாடல்களும் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் வெளியானவுடன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள், ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதால் ‘தெறி’ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், விஜய் மகள் திவ்யா, மீனா மகள் நைனிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த  படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளர். ஜி.வி.பிரகாஷூக்கு இது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் எம்.ஜி.ஆர் ரசிகர் ரசிகராக நடித்துள்ளதற்கும் விஜய் அரசியலுக்கு மிக விரைவில் வருவார் என எதிர்பார்க்கப்படுவதற்கும் சம்பந்தம் உள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *