shadow

‘விஜய் 62’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரசிகர்கள் குஷி

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ‘விஜய் 62’ படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

விஜய் நடித்த 61வது படமான ‘மெர்சல்’ சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ‘விஜய் 62’ படத்தை ஏ.ஆர்முருகதாஸ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய முறையில் படக்குழுவினர்களால் தொடங்குகிறது. முன்னதாக இந்த படத்தின் பூஜையும் நடைபெறவுள்ளது. விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதால் அவரது ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply