shadow

விஜய் ‘எங்க வீட்டு பிள்ளை’ இல்லை, நம்ம வீட்டு பிள்ளை

vijay60‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. ஏற்கனவே கேரள மாநில உரிமை ரூ.6.5 கோடிக்கும் தமிழக ரிலீஸ் உரிமை ரூ.45 கோடிக்கும் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற டைட்டில் வைக்க ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எனவே அந்த தலைப்பை தாங்கள் தேர்வு செய்யவில்லை என்று படக்குழுவினர் மறுத்ததையும் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற டைட்டிலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளதாகவும், ஒருசில ‘உங்க வீட்டு பிள்ளை’தான் இந்த படத்தின் டைட்டில் என்றும் கூறி வருகின்றனர்.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

Leave a Reply