shadow

puliகத்தி என்ற மாபெரும் சூப்பர்ஹிட் வெற்றி படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தின் பெயர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘புலி’ என்று வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் சிம்புதேவன் நேற்று அறிவித்தார்.

சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை படங்களை தொடர்ந்து விஜய்யின் ‘புலி’யும் வெற்றி பெறும் என கோலிவுட் செண்டிமெண்ட்டுகள் கூறுகின்றன.

முதலில் இந்த படத்தின் டைட்டில் பொங்கல் தினத்தில் விஜய் அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதற்குள் படத்தின் டைட்டில் இணையதளங்களில் கசிந்துவிட்டதால் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக சிம்புதேவன் கூறியுள்ளார்.

விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

Leave a Reply